இந்த ஆண்டில் 3வது முறையாக கார் விலையை உயர்த்திய ஜிஎம்!

உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு, ரூபாய் மதிப்பில் ஏற்ற இறக்கங்களால் கார் விலையை அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகின்றன. இதே காரணங்களுக்காக ஜனவரியிலும், பட்ஜெட்டில் வரி கூட்டப்பட்டதால் மார்ச்சிலும் ஏற்கனவே பெரும்பாலான நிறுவனங்கள் கார் விலையை உயர்த்தின.
இந்த நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்வு அஸ்திரத்தை கார் நிறுவனங்கள் கையிலெடுத்துள்ளன. மாருதி, ஹோண்டா ஆகிய கார் நிறுவனங்கள் கார் விலையை உயர்த்துவதாக கடந்த இரு தினங்களுக்கு முன் அறிவித்தன.
இந்த வரிசையில், செவர்லே பிராண்டில் கார் விற்பனை செய்து வரும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும் கார் விலையை ஒரு சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. உற்பத்தி செலவீனம் அதிகரித்துள்ளதை ஈடுகட்டும் வகையில் கார் விலையை உயர்த்தி இருப்பதாகவும், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவு தருவார்கள் என்று நம்புவதாகவும் ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு கார் நிறுவனங்கள் அடுத்தடுத்து விலை உயர்வை அறிவித்து வருவது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications








