காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் விரைவில் வருகிறது செவர்லே பீட்

Beat Diesel
வரும் தீபாவளி பண்டிகையின்போது காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் புதிய பீட்டை களமிறக்க ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு சலிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பீட் காரில் சில மாற்றங்களை செய்துள்ளது ஜெனரல் மோட்டார்ஸ். ஹெட்லைட், கிரில் உள்ளிட்டவைகளின் வடிவமைப்பில் ஜெனரல் மோட்டார்ஸ் கைவைத்துள்ளதாக தெரிகிறது.

அதேவேளை, எஞ்சினில் ஏதெனும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்குமா என்பது குறித்து தெரியவில்லை. தற்போது புதிய பீட்டை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சோதனை நடத்தி வருகிறது ஜெனரல் மோட்டார்ஸ்.

எனவே, வரும் தீபாவளி பண்டிகையின்போது புதிய பீட் விற்பனைக்கு வந்துவிடும் என்று ஆட்டோமொபைல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 1.2 லிட்டர் பெட்ரோல் மாடல் மற்றும் 1.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் தற்போது பீட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், பெட்ரோல் மாடலின் பெர்ஃபார்மென்ஸ் எதிர்பார்த்த அளவு இல்லை என்று வாடிக்கையாளர் தரப்பிலிருந்து கருத்துக்கள் எழுந்துள்ளன. இதனை புதிய பீட்டில் சரிசெய்து களமிறக்குமா ஜெனரல் மோட்டார்ஸ் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, July 9, 2012, 16:41 [IST]
English summary
American car maker General motors is planning to lauch new beat soon in Indian market. The new beat gets some cosmetic changes in Exterior Portion.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+