செயில் பிளாட்பார்மில் புதிய செடான் காரை அறிமுகப்படுத்தும் ஜிஎம்

அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் செவர்லே பிராண்டில் இந்தியாவில் கார் விற்பனை செய்து வருகிறது. யுவா, ஆப்ட்ரா உள்ளிட்ட பழைய மாடல்களை வைத்து பிரயோஜனமில்லை என்று கருதும் அந்த நிறுவனம் அதற்கு மாற்றாக புதிய மாடல்களை களமிறக்க உள்ளது.
அதில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியள்ள மாடல் செவர்லே செயில். தனது சீனப் பிரிவு வடிவமைத்துள்ள இந்த காரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர ஜிஎம் திட்டமிட்டுள்ளது. மாருதி ஸ்விப்ட்டுக்கு நேரடி போட்டி கொடுக்கும் விதத்தில் பிரிமியம் வசதிகளுடன் இந்த கார் வர இருக்கிறது.
இந்த நிலையில், செயில் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட புதிய செடான் காரையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர ஜெனரல் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.
தற்போது என்ட்ரி லெவல் செடான் கார் மார்க்கெட்டில் ஸ்விப்ட் டிசையர் மற்றும் டொயோட்டோ எட்டியோஸ் கார்கள்தான் விற்பனையில் முன்னிலை வகிக்கின்றன. இந்த இரு கார்களின் மார்க்கெட்டை உடைக்கும் வகையில் இந்த புதிய செயில் செடானை கொண்டு வர ஜிஎம் முடிவு செய்துள்ளது.
செயில் மற்றும் செயில் செடான் கார்கள் மூலமாக விற்பனையில் ஒரு கவுரமான இடத்தை பிடிக்க முடியும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது. புதிய செடான் கார் ரூ.5 லட்சம் ஆரம்ப விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








