ஜெர்மன் சொகுசு கார்களின் முன்பக்கம் ரொம்ப வீக்: சோதனையில் வெளிச்சமானது

Crash Test
ஜெர்மன் சொகுசு கார்களின் முன்பக்கம் ரொம்ப பலகீனமாக இருப்பதாக சமீபத்திய கிராஷ் டெஸ்ட் ஆய்வு முடிவு கூறுகிறது.

உலகின் பெரும்பாலான நாடுகளின் சொகுசு கார் மார்க்கெட்டில் ஜெர்மன் நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆடி, பென்ஸ், பிஎம்டபிள்யூ என அனைத்து நிறுவனங்களின் தயாரிப்புகளும் தரத்திற்கும், தொழில்நுட்பத்திற்கும் பெயர் போனவை.

இந்த நிலையில், நெடுஞ்சாலை பாதுகாப்புக்கான காப்பீட்டு அமைப்பு ஒன்று சமீபத்தியில் சொகுசு கார்களின் முன்புற கட்டுமானத்தை சோதிக்கும் வகையில் கிராஷ் டெஸ்ட் நடத்தியது. எதிரில் வரும் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதும்போதும், கம்பத்தில் மோதும்போதும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவே இந்த சோதனை.

முன்புற கட்டுமானம், பயணிகளுக்கு காயம் ஏற்படுத்தும் வாய்ப்புகள், தாங்கும் திறன், வடிவமைப்பு என பலவித அம்சங்களை கணக்கில் கொண்டு 11 என்ட்ரி லெவல் சொகுசு கார்கள் இந்த பிரத்யேக முன்புற சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதில், அகுரா டிஎல் மற்றும் வால்வோ நிறுவனத்தின் எஸ்60 கார்கள் மட்டுமே அதிக தரவரிசை புள்ளிகளை பெற்றது. நிசான் இன்பினிட்டி ஜி மட்டும் ஓரளவு ஏற்றுக்கொள்ளும் தரவரிசை புள்ளிகளை பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதில், மிகவும் பிரபலமான ஆடி ஏ4, பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், பென்ஸ் சி கிளாஸ் மற்றும் ஃபோர்டு லிங்கன் எம்கேஇசட், டொயோட்டாவின் லெக்சஸ் ஐஎஸ் ஆகிய கார்கள் ஒட்டுமொத்த தரவரிசையில் மிகவும் பின்தங்கின.

பென்ஸ் சி கிளாஸ் மற்றும் லெக்சஸ் ஐஎஸ் ஆகிய காரகள் விபத்தில் சிக்கினால் டிரைவரின் கால் பிரேக் பெடலில் சிக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சொகுசு கார் கார் மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கும் ஜெர்மன் தயாரிப்புகள் இந்த தரவரிசையில் பின்தங்கியது ஆட்டமொபைல் துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

"பெரும்பாலான கார் தயாரிப்பாளர்கள் மிதமான கிராஷ் டெஸ்ட் மற்றும் என்எச்டிஎஸ்ஏ அமைப்பின் கிராஷ் டெஸ்ட் சோதனைகளை மனதில்கொண்டே தயாரிக்கின்றனர். எனவே, பிரத்யேக முன்பக்க கிராஷ் டெஸ்ட்டுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை," என்று காப்பீட்டு அமைப்பின் தலைவர் அட்ரியன் லுந்த் தெரிவித்தார்.

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட கார்களில் ஆடி ஏ4, பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், பென்ஸ் சி கிளாஸ் மற்றும் வால்வோ எஸ் 60 ஆகிய கார் மாடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, August 18, 2012, 16:41 [IST]
English summary
Most of the entry level luxury cars, including the Mercedes-Benz C-Class, BMW 3 series -- performed poorly in a new frontal crash test developed by the Insurance Institute for Highway Safety in England.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+