மான்ஸா கார்களில் சஸ்பென்ஷன் பிரச்னையை சரிசெய்து தரும் டாடா

மான்ஸா கார்களில் தொழில்நுட்ப பிரச்னை இருக்கும் சஸ்பென்ஷன் புஷ்சை இலவசமாக மாற்றித் தருவதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

காரின் சேஸிஸ் மற்றும் சஸ்பென்ஷனை இணைக்கும் வகையில் இருக்கும் பிளாஸ்டிக் புஷ்சில் சிறு தொழில்நுட்ப கோளாறு இருப்பதாக டாடா மோட்டார்ஸ் கண்டறிந்துள்ளது. ஆனால், இதுவரை எந்தவொரு புகாரும் வரவில்லை.

இருப்பினும், வாடிக்கையாளர் நலன் கருதி அந்த புஷ்சை இலவசமாக மாற்றித் தருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள டாடா மோட்டார்சின் அனைத்து டீலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்களில் வாடிக்கையாளர்கள் தங்களது மான்ஸா காரின் சஸ்பென்ஷன் புஷ்சை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்க்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ள அனைத்து மான்ஸா கார்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்று டாடா தெரிவித்துள்ளது. மேலும், ரீகால் அறிவிப்பு இல்லை என்றும் டாடா விளக்கமளித்துள்ளது.

கடந்த ஆண்டு செல்ப் மோட்டாரை மாற்றித் தருவதற்காக 1.40 நானோ கார்களை டாடா திரும்ப பெற்றது. ஆனால், அதையும் ரீகால் இல்லை என்று டாடா விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, April 6, 2012, 9:42 [IST]
English summary
Calling it a mere 'replacement exercise' and not a recall, Tata Motors has called its mid-level Manza sedan for replacement of the anti-roll bar bush in the suspension system free of cost. The company is replacing the anti-roll bar bush with a more sturdy material than the earlier one, said a spokesman for Tata Motors.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+