புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடல்களை களமிறக்க கார் நிறுவனங்கள் தீவிரம்

குறிப்பாக, காம்பெக்ட் ரகத்தில் எஸ்யூவி மாடலை களமிறக்கவே அனைத்து நிறுவனங்களும் தற்போது தீவிரம் காட்டி வருகின்றன. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மட்டும் அடுத்ததாக காம்பெக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் களமிறங்க இருக்கிறது. ரூ.10 லட்சத்திற்குள் வரும் என்பதால் ஏக எதிர்பார்ப்பு இருக்கிறது.
இதுதவிர, விற்பனைக்கு வந்துவிட்ட டஸ்ட்டர் மற்றும் விற்பனைக்கு தயாராகி வரும் ஈக்கோஸ்போர்ட் ஆகியவை பெட்ரோல், டீசல் எஞ்சின்களை கொண்டிருப்பதும் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. எனவே, அடுத்து காம்பெக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் துண்டு போட மும்முரம் காட்டி வரும் நிறுவனங்களும் இரண்டு எஞ்சின்களிலும் களமிறக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.
நாட்டின் கார் விற்பனையில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களில் இருக்கும் மாருதி, ஹூண்டாய் நிறுவனங்கள் இதுவரை சிறிய கார் மார்க்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தன. ஆனால், தற்போது இந்த இரண்டு நிறுவனங்களும் புதிய காம்பெக்ட் எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வரும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளன.
ஸ்விப்ட் கார் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட எக்ஸ்ஏ ஆல்பா என்ற காம்பெக்ட் எஸ்யூவியை மாருதி டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைத்திருந்தது. ஸ்விப்ட் கார் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட இந்த புதிய எஸ்யூவி நிச்சயம் பெட்ரோல் மற்றும் டீசலில் வரும் என்று தெரிகிறது.
இதேபோன்று, ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனமும் எச்என்டி-7 என்ற குறியீட்டு பெயரில் புதிய காம்பெக்ட் எஸ்யூவியை பார்வைக்கு வைத்திருந்தது. இந்த நிறுவனங்கள் மட்டுமின்றி ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் டொயோட்டா நிறுவனங்களும் காம்பெக்ட் எஸ்யூவி மாடல்களை விரைவாக களமிறக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
இவை அனைத்தும் ரூ.10 லட்சம் விலைக்குள் வர இருப்பதால் அடுத்த ஆண்டு முதல் காம்பெக்ட் எஸ்யூவி மார்க்கெட் நெருதுளிபட உள்ளது. மேலும், போட்டி அதிகமாகும்போது விலை விஷயத்திலும் அனைத்து நிறுவனங்களும் கவனம் செலுத்தும் என்பதால் வாடிக்கையாளர் நிறைவான விலையில் சிறந்த தயாரிப்பை பெறும் சூழ்நிலையும் ஏற்படும்.


Click it and Unblock the Notifications








