விலை உயர்வு எதிரொலி: ஜிஎம் கார் விற்பனையில் 4 % சரிவு

Chevy Beat
கடந்த மாதம் ஜெனரல் மோட்டார்ஸ் கார் விற்பனை சரிவு கண்டுள்ளது. விலை உயர்வே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் மிதமான வளர்ச்சி கண்டு வருகிறது. விற்பனையை அதிகரிக்க அடுத்தடுத்து 15 புதிய மாடல்களை களமிறக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், ரூபாய் மதிப்பு சரிவு எதிரொலி மற்றும் உற்பத்தி செலவீனங்களால் கடந்த ஜனவரி முதல் கார்களின் விலையை ரூ.3,000 முதல் ரூ.15,000 வரை ஜெனரல் மோட்டார்ஸ் உயர்த்தியது.

இது அந்த நிறுவனத்தின் விற்பனையில் சிறிது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் அந்த நிறுவனம்8,901 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரி விற்பனையுடன் ஒப்பிடுகையில்,(9,303 கார்கள்) 4 சதவீதம் விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளது.

அந்த நிறுவனத்தின் விற்பனையில் பீட் முக்கிய பங்களிப்பை தொடர்ந்து கொடுத்து வருகிறது. குறிப்பாக, பீட் டீசல் ஓரளவு கவுரமான விற்பனை வளர்ச்சியை அந்த நிறுவனத்திற்க பெற்று தந்து வருகிறது. கடந்த மாதம் 4,684 பீ்ட் கார்களை அந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, March 2, 2012, 9:51 [IST]
English summary
General Motors India has posted a negative sales report for the month of February. The American carmaker has said it sold 8,901 vehicle in February 2012 marking a 4 per cent decline in comparison with last February
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+