பழைய மாடல்களுக்கு குட்பை: 3 புதிய கார்களை களமிறக்கும் செவர்லே
யுவா, ஏவியோ கார்கள் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ள ஜெனரல் மோட்டார்ஸ், உள்ளிட்ட 3 புதிய கார் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருகிறது.
செவர்லே பிராண்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் யுவா, ஏவியோ மற்றும் ஆப்ட்ரா கார்களால் ஜெனரல் மோட்டார்சுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.

ஏவியோ செடானுக்கு பதில் செயில் செடானையும், யுவா ஹேட்ச்பேக் காருக்கு பதில் செயில் காரையும் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. தவிர, என்ஜாய் எம்பிவியும் விரைவில் வருகிறது.
இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் தலைவர் லோவல் பேடாக் கூறுகையில்," மார்க்கெட்டில் நீண்ட நாட்களாக இருக்கும் மாடல்களுக்கு பதிலாக புதிய மாடல்களை அறிமுகப்படுத்த இருக்கிறோம்.
வாடிக்கையாளர்களுக்கு பிரிமியம் அம்சங்கள் கொண்ட சிறிய கார்களை விரைவில் மார்க்கெட்டுக்கு கொண்டு வருகிறோம். இதற்காக. யுவா, ஏவியோ கார்களின் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளது," என்றார்.
செயில், செயில் ஹேட்ச்பேக் கார்கள் ரூ.5 லட்சம் விலையில் விற்பனைக்கு வர இருப்பதாகவும், பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும் என்றும் ஜெனரல் மோட்டார்ஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், என்ஜாய் எம்பிவி கார் ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் எர்டிகாவுக்கு போட்டி கொடுக்கும் வகையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








