செவர்லே கமாரோ ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகப்படுத்தும் ஜிஎம்

இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கான மவுசு கூடிக்கொண்டே வருகிறது. இதைக்கருத்தில்க்கொண்டு, பல முன்னணி வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
இந்த வரிசையில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும் இணைய உள்ளது. உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்ற தனது கமாரோ ஸ்போர்ட்ஸ் காரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கடந்த 50 ஆண்டுகளாக மார்க்கெட்டில் வெற்றிகரமான மாடலாக வலம் வரும் கமாரோ ஸ்போர்ட்ஸ் காரின் 5ம் தலைமுறை மாடல் விரைவில் சர்வதேச மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
அந்த காரை இந்தியாவிலும் அறிமுகப்படுத்த ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. கமாரோ ஸ்போர்ட்ஸ் காரில் 6.2 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 312 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
ஆனால், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் கமாரோவில் இதே எஞ்சின் பொருத்தப்பட்டிருக்குமா அல்லது வேறு புதிய எஞ்சினுடன் வருமா என்பது குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.


Click it and Unblock the Notifications








