3 வது காலாண்டில் செயில் ஹேட்ச்பேக் கார் அறிமுகம்: ஜிஎம் தகவல்

சீனாவில் ஜெனரல் மோட்டார்ஸ் விற்பனை செய்து வரும் செயில் பிரிமியம் ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது ஜெனரல் மோட்டார்ஸ். டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த காரை ஜெனரல் மோட்டார்ஸ் பார்வைக்கு வைத்திருந்தது.
நடப்பு ஆண்டு மத்தியில் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது ஜூலை-செப்டம்பர் இடையிலான மூன்றாவது காலாண்டில் இந்த காரை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
ஸ்பார்க், பீட், யுவா ஆகிய ஹேட்ச்பேக் கார்களுக்கு அடுத்ததாக ஜெனரல் மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வரும் நான்காவது ஹேட்ச்பேக் மாடல் செயில். தவிர, என்ஜாய் எம்பிவி கார் மற்றும் மினி லோடு வேனையும் இந்த ஆண்டுக்குள் விற்பனைக்கு கொண்டு வர ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








