அடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய செவர்லே ஸ்பார்க்

புதிய ஆல்ட்டோவை அறிமுகமாவதால் சிறிய கார் மார்க்கெட்டில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆல்ட்டோவுக்கு நேர் போட்டியாளர்களி்ன் விற்பனையில் பாதிப்பு ஏற்படலாம் என கருதப்படுகிறது. இதை தவிர்த்து வாடிக்கையாளர்களை கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப கார் நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ஆல்ட்டோவின் வருகை எங்கே ஸ்பார்க் மார்க்கெட்டை பாதித்துவிடுமோ என்ற அச்சத்தில் ஸ்பார்க்கில் காஸ்மெட்டிக் மாற்றங்களையும், கூடுதல் அம்சங்களையும் சேர்த்துள்ளது ஜிஎம்.மேலும், வாடிக்கையாளர்களை கவர உள்ளலங்காரத்திலும் மேக்கப் வேலைகளை காட்டியுள்ளதாம்.
இந்த நிலையில், ஆல்ட்டோ அறிமுகமாவதற்கு முதல் நாள் அக்டோபர் 15ந்தேதி புதிய ஸ்பார்க்கை விற்பனைக்கு கொண்டு வருகிறது ஜெனரல் மோட்டார்ஸ்.
புதிய ஸ்பார்க்கின் முன்பக்க கிரில், ஹெட்லைட் டிசைனில் மாற்றங்களை செய்துள்ளதால், புதுப்பொலிவுடன் வருகிறது. எஞ்சின், டிரான்ஸ்மிஷனில் எந்த மாற்றமும் இருக்காது. பழையபடி, 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் புதிய ஸ்பார்க்கில் பொருத்தப்பட்டிருக்கும்.
3 ஆண்டுகள் வாரண்டி மற்றும் இதர சலுகைகளுடன் பண்டிகை காலத்தை அலங்கரிக்கும் மாடல்களில் ஒன்றாக அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது புதிய ஸ்பார்க்.


Click it and Unblock the Notifications








