செவர்லே செயில் பிளாட்பார்மில் புதிய மினி எஸ்யூவி: ஜிஎம் திட்டம்

அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த நிலையில், இந்தியாவில் தனது கரத்தை வலுப்படுத்தும் விதமாக அடுத்தடுத்து ஏராளமான புதிய மாடல்களை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஸ்விப்ட்டுக்கு போட்டியாக பிரிமியம் செயில் ஹேட்ச்பேக்கையும், மாருதி எர்டிகா எம்பிவிக்கு சவாலாக புதிய என்ஜாய் என்ற எம்பிவி காரையும் அந்த நிறுவனம் விரைவில் களமிறக்குகிறது. இதைத்தொடர்ந்து, செயில் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் பிளாட்பார்மிலேயே உருவாக்கப்படும் புதிய காம்பெக்ட் எஸ்யூவியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
தற்போது இந்திய வாடிக்கையாளர்கள் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் மீது மோகம் அதிகரித்து வருவதை கருத்தில்க்கொண்டு புதிய மினி எஸ்யூவியை வடிவமைக்க உள்ளதாக அந்த நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஜிஎம் இதுகுறித்து இதுவரை உறுதிப்படுத்தவில்லை.


Click it and Unblock the Notifications








