நடப்பாண்டு இறுதியில் என்ஜாய் அறிமுகம்: ஜெனரல் மோட்டார்ஸ்

7 பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட புத்தம் புதிய எம்பவி காரை ஜெனரல் மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்ட வர உள்ளது. என்ஜாய் என்று நாமகரணமிடப்பட்ட இந்த புதிய எம்பிவி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
செவர்லே தவேரா எம்பிவி கார் மூலம் எம்பிவி மார்க்கெட்டில் செய்து ருசி கண்டுள்ள ஜெனரல் மோட்டார்ஸ் அதி்லிருக்கும் வாயப்புகளை கருதி இந்த புதிய எம்பிவி காரையும் களமிறக்க உள்ளது.
இந்த நிலையில், என்ஜாய் எம்பிவி காரை இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
கோல்கட்டாவில் புதிய தவேரா நியோ3 எம்பிவி கார் அறிமுக விழா நடந்தது. இதில்,ஜெனரல் மோட்டார்ஸ் தலைவர் லோவல் பாடோக் கலந்து கொண்டார். அப்போது, பேசிய அவர், எங்களது சீன கூட்டணி ஒத்துழைப்பில் உருவான என்ஜாய் கார் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு ஆண்டு இறுதியில் என்ஜாய் எம்பிவியை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். எம்பிவி மார்க்கெட்டில் என்ஜாய் கடும் போட்டியை கொடுக்கும்," என்றார்.
இதனிடையே, கடந்த ஆண்டு 21,000 தவேரா கார்களையும், 45,000 பெட்ரோல் கார்களையும், 22,000 ஸ்பார்க் கார்களையும் விற்றுள்ளதாகவும், இந்த ஆண்டு 8 முதல் 10 சதவீத விற்பனை வளர்ச்சியை எட்டுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications








