உலக அளவில் மேட் இன் இந்தியா டீசல் எஞ்சின்களை பயன்படுத்த ஜிஎம் முடிவு

அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் புதிய ஸ்மார்ட்டெக் டீசல் எஞ்சினை அறிமுகம் செய்தது. இந்த எஞ்சின் பெங்களூரில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் வடிவமைப்பு மையத்தில் உருவாக்கப்பட்டது.
அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் கொண்ட இந்த டீசல் எஞ்சின் முதன்முதலாக தனது செவர்லே பீட் டீசல் காரில் பொருத்தி தற்போது விற்பனை செய்து வருகிறது ஜிஎம்.
இந்த நிலையில், இந்தியாவில் டீசல் கார்களுக்கான தேவை அதிகரித்து வருவதையடுத்து, புதிய டீசல் எஞ்சின்களை உருவாக்கும் பணிகளை அந்த நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது.
மேலும், இந்திய தொழில்நுட்பத்தில் உருவாகும் டீசல் எஞ்சின்களை உலக அளவில் பல்வேறு மார்க்கெட்டில் பயன்படுத்திக்கொள்ள ஜிஎம் முடிவு செய்துள்ளது. முதலில் வட மற்றும் தென் ஆப்ரிக்க மார்க்கெட்டுகளில் மேட் இன் இந்தியா டீசல் எஞ்சின்களை கார்களில் பொருத்தி விற்பனை செய்ய ஜிஎம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications








