கோவாவில் பெட்ரோல் விலை குறைப்பு எதிரொலி: பங்குகளில் நீண்ட க்யூ

கோவாவில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட மாநில பட்ஜெட்டில் பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியை அம்மாநில அரசு கணிசமாக குறைத்தது. இதனால், அங்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.11 குறைந்தது.
கடந்த 2ந் தேதி முதல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது. அங்கு ரூ.66க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது விலை லிட்டர் ரூ.55 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இதனால், கோவாவையொட்டியுள்ள கர்நாடகம் மற்றும் மஹாராஷ்டிராவை சேர்ந்த வாகன ஓட்டிகள் கோவாவில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர். கோவாவில் உள்ள பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதுவதாக தகவல்கள் கூறுகின்றன.
கோவாவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.2 கோடிக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில், நேற்றுமுன்தினம் மட்டும் ரூ.3.2 கோடிக்கு பெட்ரோல் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








