3 லட்சம் மைல்களை கடந்து சாதனை புரிந்த கூகுள் தானியங்கி கார்!
சோதனை ஓட்டத்தில் இதுவரை 3 லட்சம் மைல்களை(4,82,803கிமீ) விபத்து உள்ளிட்ட எந்த பிரச்னையும் இல்லாமல் வெற்றிகரமாக கடந்து சாதனை புரிந்திருக்கிறது டிரைவர் இல்லாமல் செல்லும் கூகுள் தானியங்கி கார்.
டிரைவர் இல்லாமல் இயங்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி காரை கூகுள் சோதனை நடத்தி வருகிறது. செயற்கை கோள் தொடர்புடன் இயங்கும் இந்த காரை சுற்றிலும் சென்சார்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவற்றை கம்ப்யூட்டர் உதவியுடன் கட்டுப்படுத்தி செல்லும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வரும் இந்த தானியங்கி கார் இதுவரை 300000 லட்சம் மைல்களை(4,82,803கிமீ) தூரத்தை கடந்து சாதனை படைத்திருக்கிறது,
உலகை 12 முறை வலம் வருவதற்கு சமமான இந்த தொலைவை கடந்திருக்கும் கூகுள் தானியங்கி கார் இதுவரை விபத்து, தொழில்நுட்ப பிரச்னை எதுவும் இல்லாமல் வலம் வந்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.
வரும் 2016ம் ஆண்டில் இந்த தானியங்கி கார் வணிக ரீதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார் மார்க்கெட்டில் இந்த தானியங்கி கார் புதிய அத்தியாயத்தை எழுதும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications