கார்களுக்கான இறக்குமதி வரியை அதிரடியாக குறைக்க மத்திய அரசு முடிவு?

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு தற்போது 60 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. காருக்கு இணையான அளவுக்கு வரி விதிக்கப்படுவதால், வரிச் சலுகை பெறுவதற்காக பல வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் ஆலைகளை அமைத்து கார்களை உற்பத்தி செய்து வருகின்றன.
இந்த நிலையில், இந்தியா- ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நாடுகள் இடையே தடையில்லா வணிக ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கின்றன.
இந்த ஒப்பந்ததத்தின் அடிப்படையில், ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளில் தயாரிக்கப்படும் கார்களை இறக்குமதி செய்வதற்கு 10 சதவீதம் இறக்குமதி வரியை மட்டும் விதிக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன. இதனால், பிஎம்டபிள்யூ, போர்ஷே உள்ளிட்ட நிறுவனங்களின் இறக்குமதி கார்களின் விலை கணிசமாக குறையும் என தெரிகிறது.
மேலும், பிற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான வரியையும் பாதிக்கு பாதியாக குறைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது 60 சதவீதமாக இருக்கும் இறக்குமதி வரியை 30 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த புதிய முடிவின் மூலம், இறக்குமதி கார்களின் விலை கணிசமாக குறையும் என்பதால், இறக்குமதி கார்களின் விற்பனை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேவேளை, நம் நாட்டில் வெளிநாட்டு கார் நிறுவனங்களின் நேரடி முதலீடும், வேலைவாய்ப்புகளும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








