குஜராத்தில் கார்களை சிஎன்ஜிக்கு மாற்ற உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நாட்டில் வாகன பெருக்கம் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால், சுற்றுச் சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வாகன பெருக்கத்தால் சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தை கருத்தில்கொண்டு குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதில், அடுத்த ஓர் ஆண்டுக்குள் குஜராத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து கார்களும் சிஎன்ஜிக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. கார் உள்ளிட்ட பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், கார்பன் புகை மாசுக்கட்டுப்பாட்டு விதிகளில் சர்வதேச நெறிமுறைகளை பின்பற்றவும் அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சம உரிமை என்ற பிரஜைகளின் அடிப்படை உரிமையை நிலைநாட்டும் வகையில், டெல்லி, மும்பை ஆகிய நகரங்களுக்கு வழங்கப்படும் விலையிலேயே ஆமதாபாத் நகருக்கும் சிஎன்ஜி வழங்கவேண்டும் என்று மத்திய அரசையும் அறிவுறுத்தியுள்ளது.
குஜராத் உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு லட்சக்கணக்கான வாகன உரியாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், டீசல் கார்களில் சிஎன்ஜி பொருத்lதுவதில் பிரச்னை இருப்பதும் அவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








