டெல்லியில் மீண்டும் ஒரு அதிவேக கார் விபத்து: கர்ப்பிணி பெண் உயிரிழந்த பரிதாபம்

BMW Car
டெல்லியில், அதிவேக கார் விபத்துக்கள் தொடர்கதையாகியுள்ளன.கடந்த ஆண்டு முதல் இதுவரை நடந்துள்ள 5க்கும் மேற்பட்ட விபத்துக்களில் பல அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. இதை தீவிரமாக கவனத்தில்கொண்டு சூப்பர் கார் விற்பனை செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று ஏற்கனவே எழுதியிருந்தோம்.

இந்த நிலையில், தற்போது நடந்துள்ள மற்றொரு அதிவேக கார் விபத்து டெல்லிவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 5ந் தேதி குர்கான் இப்கோசவுக் அருகில் நடந்த இந்த விபத்தில், அதிவேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு காருடன் பயங்கரமாக மோதியது. இதில் காரில் வந்த கர்ப்பிணி பெண்ணும், டிரைவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இச்சம்பவத்தை தொடர்ந்து, விபத்துக்கு காரணமான பிஎம்டபிள்யூ காரை ஓட்டி வந்ததாக கருதப்பட்ட அந்த காரின் உரிமையாளர் மகன் தலைமறைவானார். மேலும். போலீசார் கைது செய்யக்கூடும் என அஞ்சி கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். முன்னதாக இவரது ஜாமீன் மனுவுக்கு போலீசார் கோர்ட்டில் எதிர்ப்பு தெரிவி்க்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், விபத்துக்குள்ளான பிஎம்டபிள்யூ காரில் இருந்த ரத்த மாதிரியை எடுத்து தடய அறிவியல் ஆய்வு மையத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதில், காரை ஓட்டி வந்தது காரின் உரிமையாளர் மகன் சுரஜ் சிங் செராவத்(21) என்பது உறுதியானது. இவர் டெல்லியில் உள்ள கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார்.

விபத்துக்கு சுரஜ்தான் காரணம் என உறுதியானதை தொடர்ந்து, அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த டெல்லி கோர்ட் அவரை உடனடியாக ஆஜராகுமாறு உத்தரவிட்டது. ஆனால், தலைமறைவாக இருந்த சுரஜை பிடிக்க அவரது கல்லூரி உள்பட 50 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த நிலையில், சுரஜ் இன்று கோர்ட்டில் நேரில் சரண் அடைந்தார். முதலில் அவரை ஒப்படைப்பதாக கூறிய அவரது தந்தை பின்னர் போலீசாருக்கு டிமிக்கி கொடுக்க துவங்கினார். இந்தநிலையில், சுரஜ் நாடகம் ஒருவழியாக இன்று முடிவுக்கு வந்தது.

டெல்லியில் சூப்பர் கார்கள் மற்றும் அதிவேகத்தில் செல்லும் ஆற்றல் படைத்த கார்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த விபத்தில் தொழிலதிபர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் சைக்கிளில் சென்ற ஒருவரும் படுகாயமடைந்தார். அதற்கு முன்னரும் இதேபோன்று 4 சூப்பர் கார் விபத்துக்கள் நடந்துள்ளன.

வெளிநாடுகளுக்கு இணையாக நம்மூர் சாலைகளிலும் சூப்பர் கார்களை பறப்பதை பார்த்து மார்தட்டி கொள்கிறோம். ஆனால், அந்த கார்களுக்கு தகுந்த சாலை கட்டமைப்பு வசதிகள் நம் நாட்டில் இல்லை. இதை சூப்பர் காரை ஓட்டுபவர்கள் மனதில் கொள்வதில்லை.

மேலும், சூப்பர் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் உரிமையாளர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்த பின்னரே கார்களை விற்பனை செய்தால் மட்டுமே இதுபோன்ற விபத்துக்களையும், அப்பாவி உயிர்கள் பறிக்கப்படுவதையும் தவிர்க்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 15, 2012, 13:24 [IST]
English summary
The son of the BMW car owner, Suraj Singh Sherawat, surrendered in court today in the Gurgaon BMW hit-and-run case. The police will now question the 21-year-old in connection with the accident in which two people including a pregnant woman were killed. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+