20 வயதில் பிஎம்டபிள்யூ கார் வாங்கிட்டேன்: ஹன்சிகா தம்பட்டம்
ஓகே ஓகே படம் புண்ணியத்தில் 'பெரிய' மார்க்கெட் நடிகையாக உயர்ந்துள்ள கொழுக் மொழுக் ஹன்சிகா சமீபத்தில் பிஎம்டபிள்யூ காரை வாங்கியுள்ளார்.
தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் ஹன்சிகா மோத்வானி. எங்கேயும் காதல், வேலாயுதம் படங்களில் ஜெயம் ரவி, விஜய்யுடன் ஜோடி சேர்ந்தாலும், சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றி பெற்றுள்ள ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் அவருக்கு தமிழில் முக்கிய இடம் கிடைத்துள்ளது.

மேலும், இந்த படத்திற்கு பிறகு சூர்யா ஜோடியாக சிங்கம்-2 மற்றும் இந்தியிலிருந்து ரீமேக் செய்யப்பட உள்ள டெல்லி பெல்லி படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏராளமான புதிய பட வாய்ப்புகள் வந்து குவிவதால், தனது சம்பளத்தை ரூ.45 லட்சத்திலிருந்து ரூ.75 லட்சமாக உயர்த்தி விட்டார்.
சம்பளத்தை உயர்த்திய கையோடு தனது அஸ்தஸ்தையும் உயர்த்திக் கொள்ளும் விதமாக புதிய பிஎம்டபிள்யூ சொகுசு காரையும் வாங்கிவிட்டார் ஹன்சிகா. மேலும், சினிமாவில் இருப்பவர்களுக்கு சொகுசு கார்கள் புதிதல்ல என்றாலும், நான் 20 வயதிலேயே பிஎம்டபிள்யூ கார் வாங்கிவிட்டேன் என்று நண்பர்களிடமும், சினிமா வட்டாரத்திலும் பெருமையாக கூறி வருகிராறாம் ஹன்சிகா.
இந்த காருக்கு தனக்கு ராசியான 9 எண்ணை பதிவு எண்ணாக வாங்கியதில் சந்தோஷம் இரட்டிப்பாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கார் ரூ.38 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கிறது. இதன் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 268 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். காரின் அனைத்து பக்கங்களிலும் ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டிருக்கிறது.
ரன் ப்ளாட் டயர் பொருத்தப்பட்டுள்ள இந்த காரில் பஞ்சர் ஆனால் கூட அதிகபட்ச வேகத்தில் 50 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய முடியும். ஏபிஎஸ், டிஎஸ்டி உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு வசதிகளும் இருக்கிறது.
மணிக்கு இந்த கார் 250 கிமீ வரை செல்லும் திறன் படைத்தது. வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் மும்பை சாலையில் பறக்க வேண்டும் என்பதுதான் ஹன்சிகாவின் கனவாம்.


Click it and Unblock the Notifications








