ஹரியானாதான் எனது முதல் வீடு: ஒஸாமு சுஸுகி நெகிழ்ச்சி

ஒஸாமு சுஸுகி
"ஹரியானாதான் எனது முதல் வீடு; குஜராத் எனக்கு 2வது வீடு போன்றது," என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் 82 வயதாகும் சுஸுகி நிறுவனத்தின் தலைவர் ஒஸாமு சுஸுகி.

மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகியின் தலைவர் ஒஸாமு சுஸுகி கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், நேற்றுமுன்தினம் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். 90 நிமிடங்கள் வரை அவர் செய்தியாளர்களின் கேள்விகிக்கு பதலளித்தார்.

அப்போது, ஹரியானைவை விட்டு குஜராத்துக்கு செல்ல மாருதி முடிவு எடுத்துள்ளதா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்," அப்படி எந்த திட்டமும் இல்லை. ஹரியானா எனது மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டது. ஹரியானா எனது முதல் வீடு, குஜராத் எனக்கு 2வது வீடு போன்றது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் ஒஸாமு சுஸுகி.

கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவில் வர்த்தகம் செய்து வருகிறோம். மானேசர் பிரச்னையால் இங்கு முதலீடுகளை குறைக்கும் திட்டம் இல்லை. திட்டமிட்டபடி, இந்தியாவில் முதலீடுகள் தொடரும்.

மானேசர் ஆலையில் தொழிலாளர்களுக்கு மத்தியில் இருக்கும் பிரச்னைகளை கண்டறிந்து அதற்கு தீர்வு காணும் முயற்சிகளை மாருதி மேற்கொண்டு வருகிறது. நிச்சயம் இயல்பு நிலை திரும்பும்," என்று அவர் நம்பி்ககை தெரிவி்த்தார்.

வழக்கமாக, ஆண்டு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஓரிரு நாட்கள் மட்டுமே ஒஸாமு சுஸுகி இந்திய வருவார். மானேசர் வன்முறை மற்றும் குஜராத்தில் புதிய ஆலை கட்டும் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்வதற்காக முதன்முறையாக அவர் நீண்ட நாட்கள் தங்கியிருக்கிறார்.

இதனிடையே, மானேசர் ஆலையில் தற்போது நாள் ஒன்றுக்கு 900 கார்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்தம் 68 சதவீத தொழிலாளர்கள் பணிக்கு திரும்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படிப்படியாக அடுத்த 15 நாட்களில் உற்பத்தி முழு அளவை எட்டும் என்று அந்த நிறுவனத்தின் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

Article Published On: Tuesday, August 28, 2012, 10:32 [IST]
English summary
Suzuki CEO Osamu Suzuki has described Haryana, as his first home and termed Gujarat, as his second, while ruling out any impact on investments into India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+