ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஹரியானா வீரர்களுக்கு ஆடி எஸ்யூவியை பரிசாக வழங்கும் டிஎல்எப் பரச

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுப் பொருட்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஹரியானாவை சேர்ந்த மல்யுத்த வீரர்கள் சுஷில் குமார், யோகேஸ்வர், பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் துப்பாக்கிசுடும் வீரர் ககன் நரங் உள்ளிட்ட நால்வருக்கும் ஆடி க்யூ5 எஸ்யூவியை டிஎல்எப் நிறுவனம் பரிசாக வழங்குகிறது.
இதுதவிர, பதக்கத்தை பெறாவிட்டாலும் ஒலிம்பிக்கில் பங்கேற்றதற்காக ஹரியானாவை சேர்ந்த மேலும் 15 விளையாட்டு வீரர்களுக்கு ஸ்பெஷல் எடிசன் மாருதி எஸ்எக்ஸ்-4 செடான் கார் பரிசாக வழங்கப்படும் என்று டிஎல்எப் நிறுவனம் அறிவித்துள்ளது.
வரும் ஞாயிற்றுக் கிழமை சோனிபத் அருகில் கோகன்னாவில் நடைபெறும் விழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு கார் சாவிகளை ஹரியானா முதல்வர் பூபிந்தர் ஹூடா வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முன்னணி கட்டுமான நிறுவனமான டிஎல்எப் விளையாட்டு துறைக்கு அதிக ஊக்கமளித்து வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் மற்றும் கோல்ப் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு டிஎல்எப் ஸ்பான்சர் செய்து வருகிறது.
ஆடி க்யூ5 பற்றி...
சொகுசு கார் மார்க்கெட்டில் அதிகம் விரும்பப்படும் எஸ்யூவி மாடல். பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் 1.8 லிட்டர் எஞ்சினும், டீசல் மாடலில் 2.0 லிட்டர் மற்றும் 3 லிட்டர் எஞ்சின் மாடல்களில் கிடைக்கிறது.
ஆடி கார்களுக்கே உரித்தான ஸ்டைல், ரன்னிங் விளக்குகள், கண்ணாடி மேற்கூரை என அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது. பெட்ரோல் மாடல் ரூ.27.69 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.29.81 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








