மேம்படுத்தப்பட்ட புதிய மிட்சுபிஷி மான்டெரோ: எச்எம் அறிமுகம்
மேம்படுத்தப்பட்ட புதிய மிட்சுபிஷி மான்டெரோ எஸ்யூவியை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
உலகின் அசத்தலான எஸ்யூவி தயாரிப்பாளர்களின் முன்னிலை வகிக்கும் மிட்சுபிஷி ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கூட்டணியி்ல இந்தியாவில் கார் விற்பனை செய்து வருகிறது.

எஸ்யூவி கார்களுக்கான மார்க்கெட் நல்ல வளர்ச்சி கண்டு வருவதால் தற்போது இந்த கூட்டணி முக்கிய இடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளை மெல்ல துவங்கியுள்ளது. கடந்த மாதம் பஜெரோ ஸ்போர்ட் என்ற புதிய மாடலை விற்பனைக்கு கொண்டு வந்தது.
இதைத்தொடர்ந்து, மேம்படுத்தப்ட்ட அம்சங்களுடன் புதிய மான்டெரோ எஸ்யூவியை நேற்று விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது மிடசுபிஷி-ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் கூட்டணி.
பாடி கலர் பம்பர், க்ரோம் பூட்சுடன் ரேடியேட்டர் கிரில், லெதர் இருக்கைகள், கண்ணைக் கவரும் உட்புற பினிஷிங்குடன் மான்டெரோ வந்துள்ளது. குறிப்பாக, உட்புறம் முன்பைவிட அதிக கவர்ச்சியுடன் மிளிர்கிறது.
புதிய மான்டெரோ எஸ்யூவியில் 3.2 லிட்டர் டிஓஎச்சி டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 202 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. சாலிட் ஒயிட், பிளாக் மைக்கா மற்றும் கூல் சில்வர் ஆகிய வண்ணங்களில் புதிய மான்டெரோ கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








