அடுத்த ஆண்டு ஏப்ரலில் டீசல் பிரியோ செடானை களமிறக்க ஹோண்டா திட்டம்?

வரும் 2014ல் தனது முதல் டீசல் காரை அறிமுகப்படுத்த இருப்பதாக கடந்த மாதம் ஹோண்டா கார் நிறுவனம் தெரிவித்தது. முதலாவதாக, பிரியோ கார் பிளாட்பார்மில் வர இருக்கும் செடான் கார்தான் டீசல் எஞ்சினுடன் வர இருப்பதாகவும் கூறியிருந்தது.
இந்த நிலையில், கார் விற்பனை மந்தமாக இருப்பதால் முன்கூட்டியே தனது டீசல் காரை அறிமுகப்படுத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுகுறித்து ஹோண்டா நிறுவனம் இதுவரை எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications








