இந்தியாவுக்கு புத்தம் புதிய மினி எஸ்யூவி: ஹோண்டா அறிவிப்பு

அடுத்த 5 ஆண்டுகளுக்கான வர்த்தக திட்டங்களை ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதில், இந்தியாவில் புத்தம் புதிய மினி எஸ்யூவியையும் அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஹோண்டா சிஇஓ தகனோபு கூறியதாவது," அடுத்து வரும் ஆண்டுகளில் பல புதிய மாடல்களை களமிறக்க திட்டமிட்டுள்ளோம்.
இந்திய மார்க்கெட்டை பொறுத்தவரை எங்களது சர்வதேச விற்பனையில் முக்கிய பங்களிப்பை வழங்கி வரும் மார்க்கெட். எங்களது எதிர்கால திட்டங்களில் இந்திய மார்க்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக புதிய மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளோம்.
பிரியோ செடானை தொடர்ந்து ஜாஸ் ஹேட்ச்பேக் கார் பிளாட்பார்மில் வடிவமைக்கப்படும் புதிய காம்பெக்ட் எஸ்யூவியை அறிமுகப்படுத்த இருக்கிறோம். 2015ம் ஆண்டில் இந்த புதிய எஸ்யூவி இந்தியாவி்ல் அறிமுகப்படுத்தப்படும்," என்றார்.
ஹோண்டா அறிமுகப்படுத்துவதாக அறிவித்திருக்கும் புதிய காம்பெக்ட் எஸ்யூவி ரெனோ டஸ்ட்டர், மஹிந்திரா குவான்ட்டோ, பிரிமியர் ரியோ ஆகிய காம்பெக்ட் எஸ்யூவிகளுக்கு நேரடி போட்டியை கொடுக்கும் அம்சங்களுடன் வரும் என தெரிகிறது.
மேலும், இந்த புதிய எஸ்யூவி டீசல் மாடலிலும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








