ரூ.50 கோடி கொடுத்து அக்ஷய் குமாரை விளம்பர தூதராக்கிய ஹோண்டா!

ஜப்பானிய நிறுவனமான ஹோண்டா இந்திய இருசக்கர வாகன மார்க்கெட்டில் அதிவேக வளர்ச்சியை பெற்று வருகிறது. டிவிஎஸ் மோட்டார்சை பின்னுக்குத் தள்ளி தற்போது 3ம் இடத்துக்கு முன்னேறியுள்ள ஹோண்டா 2ம் இடத்தில் உள்ள பஜாஜ் ஆட்டோவுக்கும் நெருக்கடி ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், மார்க்கெட் பங்களிப்பை அதிகரிக்கும் விதமாக ட்ரீம் யுகா என்ற 110 சிசி திறன் கொண்ட புதிய மோட்டார்சைக்கிளை நேற்று அறிமுகம் செய்துள்ளது. மேலும், தனது தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் விதமாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை விளம்பர தூதராக நியமித்துள்ளது.
மேலும், விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் நடிகர் அக்ஷய் குமாருக்கு ரூ.50 கோடி கொடுத்து ஹோண்டா ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுக்கு ரூ.10 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பல்வேறு இருசக்கர வாகன நிறுவனங்கள் சினிமா மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களை விளம்பர தூதர்களாக நியமித்துள்ளன. ஆனால், தற்போதுதான் ஹோண்டா தனது முதல் விளம்பர தூதராக அக்ஷய் குமாரை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








