ஹோண்டா பிரியோ செடான்: பிரத்யேக ஸ்பை ஷாட்ஸ்
அடுத்த ஆண்டு பிரியோ பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட என்ட்ரி லெவல் செடான் காரை ஹோண்டா கார் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம். ஹோண்டாவின் முதல் டீசல் கார் என்ற பெருமையுடன் வருவதால் வாடிக்கையாளர் மத்தியில் இந்த புதிய கார் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.
இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்வதற்கு முன்பே தாய்லாந்தில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அங்கு தற்போது தீவிர சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வரும் இந்த காரின் பிரத்யேக படங்களை டிரைவ்ஸ்பார்க் தளம் முதன்முறையாக வாசகர்களுக்காக வழங்குகிறது.
இந்த புதிய கார் மாருதி டிசையர், டொயோட்டா எட்டியோஸ் உள்ளிட்ட கார்களுக்கு நேரடி போட்டியை கொடுக்கும் அம்சங்களுடன் வருகிறது. மேலும், ஹோண்டாவின் முதல் டீசல் கார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரில் தனது புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை பொருத்தி இந்த காரை அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரலில் இந்த புதிய கார் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஹோண்டா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹோண்டா பிரியோ செடான்

ஹோண்டா பிரியோ செடான்

ஹோண்டா பிரியோ செடான்

ஹோண்டா பிரியோ செடான்

ஹோண்டா பிரியோ செடான்

ஹோண்டா பிரியோ செடான்



Click it and Unblock the Notifications








