இந்தியாவில் தனி ஆவர்த்தனம் துவங்கும் ஹோண்டா கார்ஸ்!
சியல் நிறுவனத்திடமிருந்து ரூ.180 கோடி மதிப்புடைய பங்குகளை முழுவதுமாக கையகப்படுத்தியுள்ளதையடுத்து, இந்திய மார்க்கெட்டில் ஹோண்டா கார் நிறுவனம் விரைவில் தனி ஆவர்த்தனம் துவங்குகிறது.
ஜப்பானிய கார் நிறுவனமான ஹோண்டா இந்தியாவின் சியல் நிறுவனத்தின் கூட்டணியில் கார்களை தயாரித்து விற்பனை செய்து வந்தது. கடந்த 16 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வந்த இந்த கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.

இதற்காக, தனது முதலீட்டை கணிசமாக உயர்த்த ஹோண்டா முடிவு செய்தது. ஆனால், ஹோண்டாவின் கூட்டணி நிறுவனமான ஸ்ரீராம் குழுமத்தின் கீழ் செயல்படும் சியல் நிறுவனம் புதிய முதலீடு செய்வதற்கு விரும்பவில்லை. இதனால், தன் வசமுள்ள பங்குகளை வாங்கிக் கொள்ளுமாறு ஹோண்டாவிடம் கூறிவிட்டது.
இதுதொடர்பாக, இரு நிறுவனங்களுக்கு இடையில் கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. இந்த நிலையில், சியல் நிறுவனத்திடமுள்ள 1.8 கோடி பங்குகளை 180 கோடிக்கு ஹோண்டா கார் நிறுவனம் வாங்கியுள்ளது. மேலும், ஹோண்டா கார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குனர் பொறுப்புகளிலிருந்து சித்தார்த் ஸ்ரீராம் விலகியுள்ளார்.
எனவே, விரைவில் ஹோண்டா இந்திய மார்க்கெட்டில் தனியாக செயல்பாடுகளை துவங்குகிறது. மேலும், புதிய சின்னம், பெயர் ஆகியவற்றையும் விரைவில் மாற்றி அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








