கார் விற்பனை கணிசமாக உயர்வு: குஷியில் ஹோண்டா

கடந்த ஆண்டு மேமாதம் ஹோண்டா கார் நிறுவனம் 2334 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால், கடந்த மாதம் 10,334 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.
பெட்ரோல் கார்களால் மாருதியின் விற்பனையில் சரிவு ஏற்பட்டிருக்கும் நிலையில், ஹோண்டா நிறுவனத்தின் கார் நிறுவனத்தின் விற்பனை திடீரென அதிகரித்துள்ளது அந்த நிறுவனத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஹோண்டாவின் விற்பனை வளர்ச்சிக்கு பிரியோ மற்றும் சிட்டி கார்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன. கடந்த மாதம் 4512 பிரியோ கார்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது.
இதேபோன்று, 3753 சிட்டி கார்களை ஹோண்டா விற்பனை செய்து இந்த கணிசமாக விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. ஜாஸ் காரின் விற்பனையும் முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த மாதம் 1948 ஜாஸ் கார்கள் விற்பனையாகியுள்ளன.
ஆனால், சிவிக் மற்றும் அக்கார்டு கார்களின் விற்பனை சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. கடந்த மாதம் 62 சிவிக் கார்களும், 38 அக்கார்டு கார்களையும் ஹோண்டா விற்பனை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








