கார் விலை ரூ.90,000 வரை உயர்த்திய ஹோண்டா

Honda Accord
அனைத்து கார்களின் விலையையும் ரூ.4,000 முதல் ரூ.90,000 வரை உயர்த்தியுள்ளது ஹோண்டா கார் நிறுவனம்.

பட்ஜெட்டில் கலால் வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து அனைத்து கார் நிறுவனங்களும் கார் விலையை உயர்த்தி வருகின்றன. அந்த வரிசையில், ஹோண்டாவும் விலை உயர்வை அறிவித்துள்ளது.

சிறிய காரான பிரியோ விலையை வேரியண்ட்டுக்கு தக்கவாறு ரூ.4,000 முதல் ரூ.10,000 வரை உயர்த்தியுள்ளது. பிரிமியம் ஹேட்ச்பேக் காரான ஜாஸ் விலையை ரூ.5,000 முதல் ரூ.15,000 வரை அதிகரித்துள்ளது.

அந்த நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலான சிட்டி மிட்சைஸ் காரின் விலை ரூ.5,000 முதல் ரூ.10,500 உயர்ந்துள்ளது.

சிவிக் செடான் காரின் விலை ரூ.35,600 முதல் ரூ.45,800 வரை உயர்ந்துள்ளது. அக்கார்டு காரின் விலை ரூ.67,500லிருந்து ரூ.93,975 வரை உயர்த்தியிருப்பதாக ஹோண்டா தெரிவி்த்துள்ளது.

அதேவேளை, இறக்குமதி செய்து விற்கப்படும் ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் விலை உயர்வு குறித்த விபரத்தை அந்த நிறுவனம் இதுவரை தெரிவிக்கவில்லை.

(டிரைவ்ஸ்பார்க் ஆங்கில பக்கத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்)

More from DriveSpark

Article Published On: Wednesday, March 21, 2012, 14:49 [IST]
English summary
Honda Siel Cars India, (HSCI) has announced the price hike of all its models excluding Honda CR-V SUV due to increase in the basic excise duty in the Union Budget 2012-13. These new prices will come into effect from 17th March 2012.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+