5 லட்சம் வாடிக்கையாளர் கொண்டாட்டம்.. ஹோண்டா சலுகை மழை
டீசல் கார்கள் இல்லாமலேயே இதுவரை 5 லட்சம் வாடிக்கையாளர்களை இந்திய மார்க்கெட்டில் பெற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளது ஹோண்டா கார் நிறுவனம். இதை கொண்டாடும் வகையில் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.

ஜப்பானிய கார் நிறுவனமான ஹோண்டா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் மாருதிக்கு அடுத்து நன்மதிப்பை பெற்ற கார் நிறுவனமாக திகழ்கிறது. தரம், வடிவமைப்பு, வசதிகள் என அனைத்து அம்சங்களிலும் ஹோண்டா கார்கள் சிறப்பானதாக இருக்கின்றன.
இந்த நிலையில், ஹோண்டா வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டி புதிய மைல்கல்லை கடந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக அனைத்து கார் மாடல்களுக்கும் சிறப்பு சலுகைகளை ஹோண்டா அறிவித்துள்ளது.
கார்களுக்கு 3வது மற்றும் 4வது ஆண்டுக்கான நீட்டிக்கப்பட்ட வாரண்டி சலுகை மற்றும் 4 வது ஆண்டுக்கான சாலை அவசர உதவி திட்டத்தை சிறப்பு சலுகையாக வழங்குகிறது. இதுதவிர, அக்கார்டு காருக்கு ரூ.1.25 லட்சமும், சிவிக் காருக்கு 85,000 ரூபாயும், சிட்டி காருக்கு 35,000 ரூபாயும், பிரியோ காருக்கு 24 ரூபாயும் சலுகைகளை ஹோண்டா அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








