ஏப்ரல் முதல் ஹோண்டா சிட்டி காரின் விலை மேலும் உயர்கிறது

பட்ஜெட்டில் கலால் வரி உயர்த்தப்பட்டதையடுத்து சிட்டி காரின் விலையை ரூ.5,000 முதல் ரூ.10,500 வரை வேரியண்ட்டுக்கு தக்கபடி உயர்த்தியது ஹோண்டா கார் நிறுவனம். இதனால், பட்ஜெட்டுக்கு பின் சிட்டி கார் வாங்குபவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டது.
இந்த நிலையில், சிட்டி காரின் விலையை மீண்டும் ரூ.8,000 முதல் ரூ.10,000 உயர்த்தியுள்ளது ஹோண்டா. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கலால் வரி உயர்வில் பாதியளவு சுமையை மட்டும் முன்பு விலை உயர்வாக அறிவித்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்ட கலால் வரி உயர்வு முழுவதுமாக வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்வதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு மூலம் இனி சிட்டி காரின் விலை ரூ.7.10 லட்சம் முதல் ரூ.10.33 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் என்று ஹோண்டா கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications








