எர்டிகாவுக்கு போட்டியாக புதிய எம்பிவி காரை களமிறக்கும் ஹோண்டா
எம்பிவி கார் மார்க்கெட் ரணகளப்பட்டுக் கொண்டிருக்கிறது. டொயோட்டோ இன்னோவா ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் இந்த மார்க்கெட்டை அதிரடியாக எர்டிகா பங்குபோட்டுள்ளது.
அத்தோடு நில்லாமல், செவர்லே என்ஜாய், நிசான் எவாலியா என போட்டிக்கு அடுத்த எம்பிவி கார்கள் களம்புக தயாராகி கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், ஹோண்டா கார் நிறுவனமும் இந்த மார்க்கெட்டில் குதிக்கிறது.

தனது ஃப்ரீடு எம்பிவி காரை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அடுத்த தலைமுறை ஜாஸ் கார் பிளாட்பார்மில் '2என்எச் என்ற குறியீட்டு பெயரில் இந்த புதிய எம்பிவி காரை ஹோண்டா தற்போது உருவாக்கி வருகிறது.
வரும் 2014ம் ஆண்டு இறுதியில் இந்த புத்தம் புதிய எம்பிவி கார் விற்பனைக்கு வர உள்ளது. இந்த காரில் ஹோண்டா சிட்டியில் பொருத்தப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.
ரூ.10 விலைக்குள் இந்த புதிய எம்பிவி கார் மார்க்கெட்டில் களம்புகும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications








