ஹோண்டா ஜாஸ் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்- சிறப்பு பார்வை

இந்திய மார்க்கெட்டின் டாப் என்ட் ஹேட்ச்பேக் கார் எது என்றால் ஜாஸ் பக்கம் கைகாட்டுவதை தவிர வேறு வழியில்லை. வடிவமைப்பு, தரம், இடவசதி என எல்லாவிதத்திலும் ஜாஸை தட்டிக்க ஆளில்லை.

மாருதி ஸ்விப்ட், ஹூண்டாய் ஐ20, ஸ்கோடா ஃபேபியா ஆகிய அனைத்து போட்டியாளர்களுடன் நிறுத்தும்போது ஜாஸ் பக்கம் நம் ஆட்டோமேட்டிக்காக போவதை தடுக்க முடியாது. பிற கார்களிலிருந்து வித்தியாசப்படும் கவர்ச்சி ஜாஸிடம் இருக்கிறது.

Honda Jazz

கடந்த 2009ம் ஆண்டு இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஜாஸ் கார் முதலில் எதிர்பார்த்த அளவு விற்பனையாகவில்லை. இதற்கு முக்கிய காரணம் விலை. ஆம், முதலில் ரூ.7.5 லட்சம் என்ற பெரும்படியான விலையில் விற்கப்பட்ட ஜாஸ் காரை எத்துனை கூடுதல் சிறப்பு இருக்கிறது என்று ஹோண்டா கூறினாலும் அதை கேட்டுக்கொள்ள வாடிக்கையாளர்கள் தயாராக இல்லை.

இதனை தாமதமாக உணர்ந்து கொண்ட ஹோண்டா கடந்த ஆண்டு ஜாஸ் விலையை ரூ.1.75 லட்சம் அளவுக்கு அதிரடியாக குறைத்தது. மேலும், கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் எஞ்சினை ட்யூனிங் செய்தும், அலாய் வீல் உள்ளிட்ட வசதிகளுடன் தற்போது மார்க்கெட்டில் ஜாஸை களமிறக்கியுள்ளது ஹோண்டா.

தற்போது ஜாஸ் ரூ.5.75 லட்சம் முதல் ரூ.6.31 லட்சம் என்ற விலையில் கிடைப்பதால், வாடிக்கையாளர்கள் ஜாஸ் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளனர். இதனால், ஜாஸ் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. கார் வாங்க செல்லும் வாடிக்கையாளர்களின் தேர்வில் முக்கிய இடத்தை பிடித்துள்ள ஜாஸ் காரின் முக்கிய சிறப்பம்சங்களை காணலாம்.

வெளிப்புற வடிவமைப்பு:

ஏற்கனவே கூறியதுபோன்று பிற பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களிலிருந்து மாறுபட்ட வடிவமைப்பு. அந்தஸ்துக்கான கார் என்றும், கொடுக்கும் பணத்துக்கு மதிப்பான கார் என்றும் கூறும் அளவுக்கு ஜாஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹோண்டாவுக்கு பெயர் வாங்கி கொடுத்த சிட்டி செடான் கார் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட கார் என்றாலும், அந்த காரை ஒரு இடத்தில் கூட நினைவுபடுத்தவில்லை.

வித்தியாசமான முகப்பு, ஹெட்லைட், கிரில், பின்பக்க டேஞ்சர் லைட்டுகள், திருத்தமான பாடி லைன் என நெஞ்சில் நிறைகிறது ஹோண்டா ஜாஸ். பெரிய காராக தோன்றினாலும், இதன் வடிவமைப்பு ஓட்டுனர் எளிதில் பார்க்கிங் செய்யும் வகையில் இருக்கிறது.

உட்புற வடிவமைப்பு:

ஹோண்டா கார்களின் உட்புற வடிவைப்பு வாடிக்கையாளர்களிடம் பெயர் வாங்கிய ஒன்று. அந்த வகையில், ஜாஸ் உட்புறமும் கவர்ச்சியாக இருக்கிறது. 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல். அழகான சென்ட்ரல் கன்சோல், ஸ்பீடோமீட்டர் கன்சோல் என கண்களுக்கு குளிர்ச்சியை தருக்கிறது முன்பக்கம்.

யுஎஸ்பி போர்ட் வசதியுடன் கூடிய மியூசிக் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் ஸ்விட்சுகள், லெதர் இருக்கைகள் என அசத்துகிறது உட்புறம். இவை அனைத்தைவிட 5 பேர் தாராளமாக அமர்ந்து செல்ல வசதியாக விசாலமாக இருக்கிறது உட்புறம்.

எஞ்சின்:

புதிய ஜாஸ் 1.2 லிட்டர் ஐ-விடெக் எஞ்சின் ஜாஸின் மதிப்புக்கு கூடுதல் வலு சேர்க்கிறது. அதிக ஆற்றலை வெளிப்படுத்துவதுடன் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் வகையில் ஜாஸ் எஞ்சின் சமீபத்தில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 90 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

மேலும், 11.2 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் வல்லமை பெற்றிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. ஹோண்டா ஜாஸ் சராசரியாக 16.7 கிமீ மைலேஜ் கொடுப்பதாக ஹோண்டா தெரிவிக்கிறது.

பாதுகாப்பு மற்றும் இதர வசதிகள்:

ஜாஸ், ஜாஸ் செலக்ட், ஜாஸ் எக்ஸ் ஆகிய 3 வேரியன்ட்களில் ஜாஸ் கிடைக்கிறது. முன்பக்கம் ட்யூவல் ஏர்பேக்குகள், பக்கவாட்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிஎஸ் ஆகிய பாதுகாப்பு வசதிகள் இருக்கிறது. லெதர் இருக்கைகள், கீ லெஸ் என்ட்ரி, பவர் ஸ்டீயரிங், பவர் வின்டோஸ், ஏசி, சிடி எம்பி-3 ப்ளேயர், இருள் வந்தால் தானியங்கி முறையில் எரியும் ஹைட்லைட்டுகள் ஆகிய வசதிகளையும் ஜாஸ் பெற்றிருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு:

வடிவமைப்பு, உட்புற அலங்காரம், எஞ்சின் அனைத்திலும் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற கார். மொத்தத்தில் அந்தஸ்துக்கான ஒரு பிரிமியம் ஹேட்ச்பேக் கார் வேண்டும் நினைப்பவர்கள் தாராளமாக ஜாஸ் பக்கம் செல்லலாம். ஆனால், ஜாஸுக்கு டீசல் மாடல் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

(முழு விபரங்களையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)

More from DriveSpark

Article Published On: Friday, April 27, 2012, 10:54 [IST]
English summary
Honda Jazz is the first small car from the Japanese carmaker in India. The Jazz sits in the top of the hatchback segment along with the Maruti Swift, Hyundai i10, Skoda Fabia etc. What makes it different from its peers is its classy design combined with quality features and excellent interior space.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+