இந்த ஆண்டே சிட்டி டீசல் காரை அறிமுகம் செய்யும் ஹோண்டா

மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி கார்தான் விற்பனையில் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், பெட்ரோல் மாடலில் மட்டுமே சிட்டி கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டீசல் மாடல்கள் இல்லாமல் விற்பனையில் சிறிது பின்னடவை சந்தித்து வரும் ஹோண்டா விரைவில் டீசல் கார் மாடல்களை வரிசை கட்ட இருக்கிறது. அடுத்த ஆண்டு முதல் டீசல் மாடல்களை அறிமுகம செய்ய இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.
ஆனால், இந்தியாவில் சிறிய கார்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால் இந்த ஆண்டுக்குள் பிரியோ டீசல் மாடலை அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தோம்.
இந்த நிலையில், நம் நாட்டு வாடிக்கையாளர் மத்தியில் பெரும் மதிப்பை தக்கவைத்துக்கொண்டுள்ள சிட்டி காரின் டீசல் மாடலையும் இந்த ஆண்டுக்குள் களமிறக்க ஹோண்டா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டீசல் கார் மாடல்கள் மூலம் ஹோண்டாவின் விற்பனை நிச்சயம் அதிகரிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.பெட்ரோல் விலை உயர்வால் பெரும்பாலான நிறுவனங்கள் டீசல் கார்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
இந்த வரிசையில் இடம் பிடிக்க ஹோண்டாவும் முடிவு செய்து அதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக ஆட்டோமொபைல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரூ.8 லட்சம் முதல் ரூ.8.5 லட்சம் ஆரம்ப விலையில் ஹோண்டா சிட்டி டீசல் காரை அறிமுகப்படுத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








