விரைவில் வருகிறது சிஎன்ஜியில் இயங்கும் ஹோண்டா சிட்டி

Honda City
வரும் தீபாவளிக்கு முன்னதாக இயற்கை எரிவாயுவில் இயங்கும் சிட்டி காரை விற்பனைக்கு கொண்டு வருகிறது ஹோண்டா கார் நிறுவனம்.

பெட்ரோல் மாடல்களை வைததுக் கொண்டு ஹோண்டா கார் நிறுவனம் தடுமாறி நிற்கிறது. கூடிய விரைவாக டீசல் மாடல்களை அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் அந்த நிறுவனம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது.

உடனடியாக டீசல் மாடலை கொண்டு சூழ்நிலையும், தெம்பும் தற்போது ஹோண்டா வசம் இல்லை. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில்தான் டீசல் சிட்டியை விற்பனைக்கு கொண்டு வர அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், டீசல் மாடல் இல்லாத குறையை போக்கும் வகையில் வரும் தீபாவளி பண்டிகையையொட்டி இயற்கை எரிவாயுவில் இயங்கும் சிட்டி கார் மாடலை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது

சிஎன்ஜி சிலிண்டர் பொருத்தப்பட இருப்பதால் சிட்டி காரில் சில மாற்றங்களை செய்யும் பணிகளில் ஹோண்டா தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, கூடுதல் எடையை சஸ்பென்ஷனை சிறிது வலுவாக்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல் மாடலைவிட சிட்டி சிஎன்ஜி வேரியன்ட் ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை கூடுதலான விலையில் விற்பனைக்கு வரும் என்று ஹோண்டா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, August 24, 2012, 14:41 [IST]
English summary
Japanese car maker Honda is all set to roll out CNG variant of the City before Diwali, says reports.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+