சிஎன்ஜியில் இயங்கும் சிட்டி காரை களமிறக்கும் ஹோண்டா

Honda City
சிட்டி விற்பனையில் ஏற்பட்டு வரும் சரிவை தடுத்து நிறுத்தும் விதமாக சிஎன்ஜியில் இயங்கும் சிட்டி காரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது ஹோண்டா.

தரம், வடிவமைப்பு என அனைத்து விதத்திலும் ஹோண்டா கார்கள் மீது வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்து வருகிறது. குறிப்பாக சிட்டி காரின் மீது தனி ஈர்ப்பு இருக்கிறது.

ஆனால், டீசல் மாடல் இல்லாததால் சிட்டியின் விற்பனையில் கூட கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்துவதற்கு ஹோண்டா கையில் உடனடி உபாயங்கள் இல்லாமல் தவித்து வருகிறது.

வரும் 2014ம் ஆண்டில்தான் டீசல் காரை அதுவும் முதலாவதாக பிரியோ செடான் காரைத்தான் டீசல் எஞ்சின் பொருத்தி விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு மாற்று தேர்வை வழங்கும் வகையில், சிஎன்ஜியில் இயங்கும் சிட்டி காரை விரைவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது ஹோண்டா கார் நிறுவனம்.

தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பெட்ரோல் மாடலை விட சிஎன்ஜி மாடல் ரூ.50,000 முதல் ரூ.60,000 விலை கூடுதலாக இருக்கும் என தெரிகிறது.

சிஎன்ஜி சிலிண்டர் கிட் பொருத்தப்படுவதால் கூடுதல் எடையை தாங்கும் வகையில் சிட்டியின் சஸ்பென்ஷன் உள்ளிட்டவற்றில் மாற்றங்களை செய்துள்ளது ஹோண்டா.

மேலும், ஏற்கனவே சிட்டி கார் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு டீலர்கள் வழியாக சிஎன்ஜி சிலிண்டர் கிட்டை தனியாக வாங்கி பொருத்திக் கொள்ளும் வகையில் விற்பனை செய்யவும் ஹோண்டா முடிவு செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 9, 2012, 11:43 [IST]
English summary
Honda, the Japanese carmaker which is currently struggling with not having diesel variants in its line-up is taking up the route of launching CNG powered cars to attract buyers. It is reportedly planning to launch a CNG powered variant of its best selling sedan City before the end of October.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+