டீசல் எஞ்சினுடன் முதலில் பிரியோ செடான்: ஹோண்டா தகவல்

இந்தியாவில் டீசல் கார்களுக்குத்தான் தற்போது மார்க்கெட். ஆனால், ஹோண்டாவிடம் டீசல் எஞ்சின் மாடல்கள் இல்லாததால் விற்பனையில் பின் தங்கி வருகிறது.
இந்த நிலையில், வரும் 2014ம் ஆண்டு முதல் டீசல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. பிரியோ ஹேட்ச்பேக் கார் பிளாட்பார்மில் வரும் என்ட்ரி லெவல் செடான் கார்தான் முதன்முதலாக டீசல் எஞ்சினுடன் வர இருக்கிறது.
அதிக மைலேஜ் கொடுக்கும் தொழில்நுட்பத்துடன் வர இருக்கும் இந்த புதிய எஞ்சின் மூலம் இந்திய மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிப்போம் என ஹோண்டா தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து கார் மாடல்களிலும் டீசல் மாடல்களையும் அறிமுகப்படுத்த இருப்பதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஹோண்டா அறிமுகப்படுத்த இருக்கும் புதிய என்ட்ரி லெவல் செடான் கார் மாருதி டிசையர், டொயோட்டா எட்டியோஸ் ஆகிய கார்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications








