பிரியோ டீசல் மாடலை அறிமுகப்படுத்தும் ஹோண்டா

இந்தியாவில் டீசல் கார்களுக்கு தேவை கணிசமாக உயர்ந்து வருவதால் அனைத்து முன்னணி நிறுவனங்களும் டீசல் கார்களை அடுத்தடுத்து அறிமுகப்படுத்தி வருகின்றன.
இந்த வரிசையில் ஹோண்டா நிறுவனமும் இணைய உள்ளது. தனது பிரியோ ஹேட்ச்பேக் காரின் டீசல் மாடலை இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அதாவது, வரும் தீபாவளி பண்டிகையையொட்டி டீசல் பிரியோவை ஹோண்டா அறிமுகப்படுத்திவிடும் என்று தெரிகிறது.
இதற்காக, 1.2 லிட்டர் காமன் ரயில் டீசல் எஞ்சினை அந்த நிறுவனம் தற்போது பிரியோவில் பொருத்தி சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத்தொடர்ந்து, சிட்டி மற்றும் ஜாஸ் கார்களிலும் டீசல் மாடலை அடுத்த ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை அதீத வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








