சிட்டியைவிட குறைந்த விலையில் புதிய செடான் காரை களமிறக்கும் ஹோண்டா

பிரியோ ஹேட்ச்பேக் காரின் பிளாட்பார்மில் வடிவமைக்கப்படும் இந்த புதிய கார் மாருதி டிசையருக்கு நேரடி போட்டியை கொடுக்கும் அம்சங்களுடன் வருகிறது.
முதல்முறை கார் வாங்குபவர்கள் கவரும் வகையில் இந்த புதிய காரை விற்பனைக்கு கொண்டு வர ஹோண்டா முடிவு செய்துள்ளது.
ஆனால், இந்த காரில் பொருத்தப்பட இருக்கும் எஞ்சின் உள்ளிட்ட தகவல்கள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
முதலில் தாய்லாந்து மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த புதிய கார் அடுத்து இந்திய மார்க்கெட்டிற்கு வரும் என்று தெரிகிறது.
ரூ.5 லட்சம் விலையில் கொண்டதாக இந்த காரை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதால், விற்பனையில் ஹோண்டாவுக்கு நிச்சயம் புதிய இடத்தை பிடித்து தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








