விற்பனையில் நம்பர்-1 இடத்தை மீண்டும் தக்கவைத்த ஹோண்டா சிட்டி

மிட் சைஸ் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டிதான் விற்பனையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறது. ஆனால், கடந்த ஆண்டு ஹோண்டா சிட்டியின் விற்பனை திடீரென குறைந்தது.
பெட்ரோல் விலை உயர்வு மற்றும் ஹூண்டாய் புளூயிடிக் வெர்னா உள்ளிட்ட கார்களால் ஹோண்டா சிட்டிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு பின்தங்கியது. ஆனால், ஹோண்டா சுதாரித்துக்கொண்டு சிட்டி விலையை அதிரடியாக குறைத்ததால் மீண்டும் விற்பனை ஏற்றம் பெற்றது.
இந்த நிலையில், தாய்லாந்து வெள்ளப்பெருக்கு காரணமாக உதிரிபாகங்கள் தட்டுப்பாட்டால் ஹோண்டா சிட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால், கடந்த சில மாதங்களாக ஹோண்டா சிட்டியின் விற்பனை கடுமையாக வீழ்ந்தது.
இந்த நிலையில், கடந்த டிசம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய சிட்டியை கடந்த மாதம் முதல் ஹோண்டா டெலிவிரியை துவங்கியது. இதனால்,மீண்டும் ஹோண்டா சிட்டியின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த மாதம் 6,052 ஹோண்டா சிட்டி கார்களை விற்பனையாகி தனது முதல் இடத்தை மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டது. இதற்கடுத்து, இரண்டாம் இடத்தில் ஹூண்டாய் வெர்னா உள்ளது. கடந்த மாதம் 4,500 வெர்னா கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications