பிரியோவுக்கு மீண்டும் புக்கிங்கை துவங்கியது ஹோண்டா

Honda Brio
உதிரிபாகங்கள் தட்டுப்பாடு காரணமாக பிரியோவுக்கு நிறுத்தப்பட்டிருந்த புக்கிங்கை மீண்டும் துவங்கியுள்ளது ஹோண்டா.

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா கார் நிறுவனம், இந்தியாவில் உள்ள கார் உற்பத்தி ஆலைகளுக்கு ஜப்பான் மற்றும் தாய்லாந்திலுள்ள ஆலைகளிலிருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு தாய்லாந்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு காரணமாக இந்தியாவிலுள்ள ஹோண்டா கார் ஆலைக்கு உதிரிபாகங்கள் சப்ளை அடியோடு தடைபட்டது.

இதனால், ஹோண்டா கார் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, ஜாஸ், பிரியோ உள்ளிட்ட கார்களுக்கான புக்கிங்கை ஹோண்டா நிறுத்தியது.

இந்த நிலையில், தற்போது தாய்லாந்திலிருந்து உதிரிபாகங்கள் சப்ளை மீண்டும் துவங்கியுள்ளதால், ஹோண்டா கார் உற்பத்தி சீரடைந்துள்ளது.

இதையடுத்து, பிரியோ ஹேட்ச்பேக் காருக்கான புக்கிங்கை ஹோண்டா மீண்டும் துவங்கியுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பிரியோ வாடிக்கையாளர் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றுள்ளது.

ரூ.4.04 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் பிரியோ ஹேட்ச்பேக் கார் மூலம் தனது விற்பனை நல்ல வளர்ச்சி பெறும் என்று ஹோண்டா நம்புகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 22, 2012, 11:26 [IST]
English summary
Japanese car maker Honda has reopened the brio hatchback car in India. The company was stopped the brio bookings due to Thailand floods last year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+