அடுத்த ஆண்டு புதிய செடான் கார்: டீஸர் படத்தை வெளியிட்ட ஹோண்டா

பிரியோ பிளாட்பார்மில் வடிவமைக்கப்படும் இந்த புதிய கார் மாருதி டிசையர், டொயோட்டா எட்டியோஸ் உள்ளிட்ட கார்களுக்கு நேரடி போட்டியை கொடுக்கும் அம்சங்களுடன் வருகிறது.
மேலும், ஹோண்டாவின் முதல் டீசல் கார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரில் தனது புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை பொருத்தி இந்த காரை அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரலில் இந்த புதிய கார் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஹோண்டா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய கார் முதலில் தாய்லாவந்து மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications