ஆக்டிவா, ஷைன் உற்பத்தி அதிகரிப்பு: காத்திருப்பு காலம் வெகுவாக குறையும்

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் வர்த்தக விரிவாக்கத்தை பெரிய அளவில் செய்து வருகிறது. ஹீரோ ஹோண்டாவிலிருந்து பிரிந்து விட்ட அந்த நிறுவனம் தற்போது முதலிடத்தில் உள்ள தனது பங்காளி ஹீரோவை பின்னுக்குத் தள்ளும் திட்டங்களுடன் களமிறங்கியுள்ளது.
ஹரியானா மாநிலம், மானேசர் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் தபுகெரா ஆகிய இடங்களில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில், தபுகெரா ஆலை கடந்த ஆண்டுதான் திறக்கப்பட்டது. இந்த நிலையில், தபுகெரா ஆலையில் இரண்டாவது உற்பத்தி பிரிவை ஹோண்டா திறந்துள்ளது.
இந்த ஆலையில், தற்போது ஹோண்டாவின் ஆக்டிவா ஸ்கூட்டர், ஷைன் 125சிசி பைக் மற்றும் சிபி ட்விஸ்ட்டர் ஆகிய மாடல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தபுகெரா ஆலையில் தற்போது இரண்டாவது பிரிவும் உற்பத்தி துவங்கப்பட்டிருப்பதால், மேற்கண்ட மாடல்களுக்கான காத்திருப்பு காலம் வெகுவாக குறையும்.
இதுதவிர, பெங்களூர் அருகில் புதிய இருசக்கர வாகன உற்பத்தி ஆலையை ஹோண்டா கட்டி வருகிறது. அடுத்த ஆண்டு இந்த புதிய ஆலையில் உற்பத்தி துவங்கப்பட உள்ளது. எனவே, அனைத்து கார் ஆலைகளிலும் இருசக்கர வாகன உற்பத்தி துவங்கப்பட்டவுடன் ஹோண்டாவின் ஆண்டுக்கு 40 லட்சம் டூ வீலர்களை உற்பத்தி செய்யும் திறனை ஹோண்டா பெற்றிருக்கும்.


Click it and Unblock the Notifications








