மார்ச்சில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் விற்பனை இருமடங்காக அதிகரிப்பு

ஜப்பானிய நிறுவனமான ஹோண்டாவின் எஞ்சின் மற்றும் பிராண்டு மீது இந்திய வாடிக்கையாளர்களுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. இதனால், உள்நாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனங்களை காட்டிலும் ஹோண்டாவின் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது.
கடந்த மாதம் அந்த நிறுவனம் மொத்தமாக 2,20,487 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச்சை காட்டிலும் விற்பனை இரு மடங்கு உயர்ந்துள்ளது. இதில், ஆக்டிவா மற்றும் டியோ ஸ்கூட்டர்களின் கை ஓங்கி இருந்தது. கடந்த மாதம் மட்டும் 1,38,134 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. ஸ்கூட்டர் விற்பனை 70 சதவீதம் உயர்வு கண்டுள்ளது.
பஜாஜ் ஆட்டோவை பின்னுக்குத் தள்ளி ஹோண்டா இரண்டாவது இடத்தை பிடித்ததா அல்லது தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறதா என்பது குறித்து பஜாஜ் ஆட்டோவின் விற்பனை விபரம் வந்தால்தான் தெரியும்.


Click it and Unblock the Notifications








