இந்தியாவில் ஹோண்டாவின் டீசல் பிரியோ ரகசியமாக சோதனை

Honda Brio
டெல்லி அருகே குர்கானில் டீசல் பிரியோவை ஹோண்டா படுரகசியமாக சோதனை நடத்திய தகவல் வெளிவந்துள்ளது. ஆனால், ஹோண்டா இதுகுறித்து உறுதிப்படுத்தவில்லை.

பெட்ரோல் விலையால் துவண்டு போன வாடிக்கையாளர்களுக்கு ஒரே ஆறுதல் அளிக்கும் விஷயம் டீசல் கார்கள்தான். விலை அதிகம் என்றாலும் பரவாயில்லை நல்ல மைலேஜ் கிடைக்கும், டீசல் விலையும் குறைவு என்பதே அவர்கள் எண்ணம்.

இதனால், டீசல் கார்கள் விற்பனை சூடுபறக்கிறது. இதை மனதில்கொண்டு அனைத்து கார் நிறுவனங்ளும் டீசல் கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதில் முனைப்பு காட்டி வருகின்றன.

இந்த நிலையில், பெட்ரோல் கார்களை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தி வரும் அடுத்த ஆண்டு சிவிக் காரில் தனது புதிய 1.6 லிட்டர் டீசல் எஞ்சினை பொருத்தி விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.

இதனிடையே, வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு இனிப்பான செய்தி கிடைத்துள்ளது. ஹோண்டாவின் புதிய டீசல் பிரியோ சோதனை செய்யப்படும் புகைப்படம் டீம் பிஎச்பி இணையத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி அருகே குர்கானில் அந்த படம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அடுத்த ஆண்டு டீசல் பிரியோ விற்பனைக்கு வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், டீசல் பிரியோவில் பொருத்தப்ப்டடிருக்கும் எஞ்சின் உள்ளிட்ட விபரங்கள் தெரியவில்லை. கண்டிப்பாக 1.6 லிட்டர் எஞ்சின் இல்லாமல் அது புதிய எஞ்சினாக இருக்கும் என்பது நிச்சயம்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 26, 2012, 10:57 [IST]
English summary
Japanese Car Maker, Honda is known to maintain secrets about its new products. The trails have been found related to the all new diesel engine Honda Brio spotted having testing rounds near Gurgaon.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+