பிரியோவைவிட சிறிய காரை அறிமுகப்படுத்த ஹோண்டா ஆயத்தம்

விற்பனையை அதிகரிக்க புதிய மாடல்களை அடுத்தடுத்து அறிமுகப்படுத்த ஹோண்டா கார் திட்டமிட்டுள்ளது. இதற்காக, கடந்த 60களில் விற்பனை செய்த தனது என்600 காரின் தோற்றத்தின் பின்னணியில் வடிவமைக்கப்பட்ட புதிய என்600 காரை மீண்டும் மறுவடிவமைப்பு செய்து அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
புதிய தலைமுறை என்600 காரை வடிவமைக்கும் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக ஜப்பானிலுள்ள ஹோண்டா வடிவமைப்பு மையத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த புதிய கார் பார்வைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3378 மிமீ நீளமும் 1472 மிமீ அகலமும் கொண்டதாக இந்த புதிய காரின் கான்செப்ட் மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காரில் 660 சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். எனவே, தற்போது இந்தியா உள்ளிட்ட மார்க்கெட்டுகளில் ஹோண்டா விற்பனை செய்து வரும் பிரியோ காரை விட அளவிலும், விலையிலும் குறைவானதாக இந்த கார் வரும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








