ஜெனிவா மோட்டார் ஷோவில் புதிய டீசல் எஞ்சினை அறிமுகப்படுத்திய ஹோண்டா

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலக அளவில் தனிப்பட்ட மதிப்பும், மவுசும் இருக்கிறது. ஆனால், ஹோண்டாவால் பிற நிறுவனங்களை போன்று தடாலடியான விற்பனை வளர்ச்சியை பெற முடியவில்லை.
இதற்கு முக்கிய காரணம் கையில் டீசல் கார்கள் இல்லாததுதான். இதை தாமதமாக உணர்ந்து கொண்ட ஹோண்டா தற்போது கார்களுக்கான புதிய டீசல் எஞ்சினை உருவாக்கியுள்ளது.
இந்த புதிய 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் நேற்று ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த புதிய டீசல் எஞ்சின் முதலாவதாக சிவிக் செடான் காரில் பொருத்தப்படும் என்றும் ஹோண்டா தெரிவித்துள்ளது.
1.6 லிட்டர் ரக எஞ்சின்களில் இலகு எடை கொண்டதாகவும், ஒரு கிலோ மீட்டருக்கு வெறும் 95 கிராம் மட்டுமே கார்பன் புகையை வெளியேற்றும் தொழில்நுட்பத்துடன் இந்த புதிய டீசல் எஞ்சின் வடிவமைக்கப்பட்டிருப்பதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.
ஹோண்டாவின் இந்த புதிய 1596 சிசி திறன் கொண்ட எஞ்சின் 4,000 ஆர்பிஎம் எஞ்சின் சுழல் வேகத்தில் 118 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என்று ஹோண்டா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








