பட்ஜெட்டில் எஸ்யூவி ரக கார்களுக்கு பல்க் வரி: எவ்வாறு கணக்கிடப்படும்

Mahindra XUV 500
பட்ஜெட்டில் கார்கள் மீது சற்று அழுத்தமாகவே கையை வைத்துவிட்டார் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி. பல்வேறு காரணங்களால் நடப்பு நிதி ஆண்டில் கார் விற்பனை எதிர்பார்த்த விற்பனை வளர்ச்சியை எட்டாத நிலையில், இந்த கூடுதல் வரி விதிப்பு நிச்சயம் கார் விற்பனையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என கார் நிறுவனங்கள் பதறுகின்றன.

குறிப்பாக, சொகுசு ரக கார்களுக்கு முன்பைவிட அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சிறிய கார் விற்பனை சோர்ந்து போயிருந்த நிலையிலும், மார்க்கெட்டில் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இதனால், பெரும்பான்மையான நிறுவனங்கள் அனைத்தும் எஸ்யூவி, எம்பிவி மாடல்களை அடுத்தடுத்து களமிறக்கி வருகின்றன. இந்த நிலையில்தான், எஸ்யூவி கார்கள் சற்று சொகுசு ரகத்தில் இருப்பதால் அதை குறிவைத்து வரியை கணிசமாக உயர்த்தியுள்ளார் அமைச்சர் பிரணாப்.

பட்ஜெட்டுக்கு பின் எஸ்யூவி கார்கள் மீதான வரி உயர்வு எவ்வாறு கணக்கிடப்படும் என்பதை காணலாம்.

4 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட கார்கள் பெரிய கார்கள் ரகத்தில் வருகிறது. மேலும்,அதன் எஞ்சின் திறனும் அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், 1.5 லிட்டருக்கு மேல் திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் கார்களும் பெரிய கார்களாக வரையறுக்கப்பட்டுள்ளன.

இதில், பட்ஜெட்டுக்கு முன் பெரிய கார்களுக்கு 22 சதவீத கலால் வரி விதிக்கப்பட்டது. உதாரணமாக, மஹிந்திரா ஸைலோவின் உற்பத்தி செலவீனம் ரூ.8 லட்சமாக இருக்கும்பட்சத்தில், அதற்கு கலால் வரி 22 சதவீதம் (ரூ.1.76 லட்சம்)விதிக்கப்பட்டது. தவிர, ரூ.15,000 கூடுதல் வரியும் விதிக்கப்பட்டு வந்தது.

மொத்தமாக கலால் வரியாக ரூ.1.91 லட்சம் செலுத்த வேண்டும். இதனால், ஸைலோவின் எக்ஸ்ஷோரூம் ரூ.9.91 லட்சமாக கணக்கிடப்படும்.

ஆனால், பட்ஜெட்டில் கலால் வரி 5 சதவீதம் கூட்ட்பபட்டு 27 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. மேலும், கூடுதல் கலால் வரி நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முன்பை விட தற்போது எஸ்யூவி உற்பத்திக்கான கலால் வரி கணிசமாக உயரும்.

முன்பு ரூ.8 லட்சத்தில் உற்பத்தி செய்யப்படும் ஸைலோவுக்கு மொத்தமாக கலால் வரி 1.91 லட்சமாக இருந்தது தற்போது புதிய வரி விதிப்பின் மூலம் கணக்கிடும்போது கலால் வரி மட்டும் ரூ.2.16 லட்சமாக அதிகரிக்கும். இதனால், ஸைலோவின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.10.16 லட்சமாக இருக்கும்.

இதேபோன்று, அனைத்து எஸ்யூவி கார்களுக்கும் கணக்கிடப்படும். தற்போது விற்பனையில் முன்னிலை வகிக்கும் மஹிந்திரா புதிய எக்ஸ்யூவி 500 விலை ரூ.35,000 அதிகரிக்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

அனைத்து எஸ்யூவி கார்களுக்கும் இதே அடிப்படையில் கலால் வரி கணக்கிடப்பட்டு விலையை உயர்த்த கார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால், சொகுசு கார்களின் விலை ரூ.35,000 முதல் ரூ.3 லட்சம் வரை உயரும் என்று தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 17, 2012, 15:09 [IST]
English summary
The government has raised the tax of bigger vehicles to 27% from 22% which may result in the price of executive sedans such as Honda City, Toyota Camry and pricey sports utility vehicles like the BMW X1, Audi Q5 increase by Rs. 35,000-3,00,000.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+