ஹூண்டாயின் இலவச கார் பரிசோதனை முகாம்: நாளை துவங்குகிறது

By Saravana
Hyundai Car care Clinic
கார்களுக்கான இலவச பரிசோதனை முகாமை ஹூண்டாய் அறிவித்துள்ளது. நாளை துவங்கும் இந்த 13வது இலவச சிறப்பு பரிசோதனை முகாம் வரும் 23ந் தேதி வரை நடக்கிறது.

இந்த இலவச பரிசோதனை முகாமில் எஞ்சின், டிரான்ஸ்மிஷன், எலக்ட்ரிக்கல் சிஸ்டம், ஏசி உள்ளிட்ட முக்கிய பரிசோதனைகள் உள்பட 80 விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இந்த பரிசோதனை முகாமில் கலந்து கொள்ளும் வாடிக்கையாளர்கள் உதிரிபாகங்களின் விலையில் 10 சதவீத தள்ளுபடியையும், லேபர் கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடியையும் பெறலாம்.

மேலும், நீட்டிக்கப்பட்ட வாரண்டி, கூடுதல் மதிப்பு சேவைகளையும் பெற முடியும். நாடு முழுவதும் உள்ள 830 அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களில் இந்த இலவச பரிசோதனை முகாம் நடைபெற இருப்பதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

இதுதவிர, பரிசு போட்டியில் குலுக்கல் முறையில் வெல்லும் 9 பேருக்கு பார்முலா ஒன் டிக்கெட் பரிசாக கிடைக்கும் என்பது உள்பட ஏராளமான பரிசுகளையும் வெல்லும் வாய்ப்பையும் வழங்குவதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

Article Published On: Thursday, September 13, 2012, 11:40 [IST]
English summary
Hyundai Motors has announced nationwide Free Car service camp To be held between September 14 - 23, 2012. Hyundai will organise this free clinic across 830 company workshops across the country.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+